எம்.பி. வசந்தகுமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

0 3736
மறைந்த காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் உடல் அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், வசந்த் அன்கோ உரிமையாளருமான வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கொரோனாவில் இருந்து அவர் மீண்டுவிட்டதாக பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை காலமானார்.

சென்னையில் நேற்று பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்திற்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. நேற்றிரவு 12 மணி அளவில் சொந்த ஊருக்கு வந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை அடுத்து இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று அடக்கம் செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments