ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் சாதனை

0 4117
ஆசியாவிலேயே முதன்முறையாக கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை - சென்னை மருத்துவர்கள் சாதனை

கொரோனாவில் இருந்து மீண்டவருக்கு, ஆசியாவிலேயே முதன்முறையாக வெற்றிகரமாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரைச் சேர்ந்த 48 வயது தொழிலதிபர் ஒருவர்,வைரஸ் தொற்று உறுதி ஆகி, நுரையீரல் பெருமளவில் சேதம் அடைந்த நிலையில், சென்னை - MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சேதம் அடைந்த இவரின் நுரையீரலை அகற்றிய மருத்துவ குழுவினர், மூளைச் சாவு அடைந்த நபர் ஒருவரின் நுரையீரலை, வெற்றிகரமாக பொருத்தியதாக இம் மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் மாற்று திட்ட தலைவரும், இயக்குநருமான மருத்துவர் K.R. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

தொழிலதிபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், நுரையீரல் சிறப்பாக இயங்கி வருவதாகவும்  MGM மருத்துவமனை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments