ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியது தவறான முடிவு - இலங்கை அரசு

0 4209

சீனாவிற்கு 99 ஆண்டு கால குத்தகைக்கு ஹம்பன்தோட்டா துறைமுகத்தை வழங்கியது தவறான முடிவு என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த இலங்கை வெளியுறவு செயலாளர் ஜெயந்த் கொலம்பேஜ், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட தாங்கள் வாய்ப்பளிக்க மாட்டோம் என்றார்.

எனவே பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சிக்காக மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார். நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதால், இந்தியாவின் நலன்களை இலங்கை பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments