சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் மேல்முறையீடு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
ஆலையில் இருந்து வெளியாகும் நச்சுப்புகையால் நோய்கள் பரவுவதாக கூறி 2018 மே மாதம் 28 ஆம் தேதி ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து தாக்கலான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடந்த 18-ந்தேதி காணொலி வாயிலாக அளித்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கனவே தமிழக அரசு, மதிமுக, மக்கள் அதிகாரம் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Comments