5 மாதங்களுக்குப் பின் பத்மநாபசாமி கோவில் வழிபாட்டுக்குத் திறப்பு

0 1290
திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் ஐந்து மாதங்களுக்குப் பின் முதன்முறையாகப் பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில் ஐந்து மாதங்களுக்குப் பின் முதன்முறையாகப் பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நாட்டின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டதை அடுத்துக் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவில் இன்றுமுதல் மீண்டும் பொதுமக்களின் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் தீபாராதனை முடியும் வரையும் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments