பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க பிரதமர் மோடி ஆலோசனை

0 3485
பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்க பிரதமர் மோடி ஆலோசனை

பொம்மை தயாரிப்பு தொடர்பாக மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

சர்வதேச அளவில் விற்பனையாகும் வகையில் இந்தியாவில் பொம்மை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான வழிகள் குறித்து விவாதம் நடத்திய பிரதமர், பொம்மைகள் நமது நாட்டு கலாசாரத்தைப் பிரதிபலிப்பதாக தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு மிகச்சிறிய வளர் பருவத்திலேயே நம் நாட்டின் தொன்மை மிக்க கலாசாரத் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். குழந்தைகளிடம் படைப்பாற்றலை வளர்க்கவும் புதிய முறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் போன்றவற்றில் பயிற்சிகளை அளிக்கலாம் என்றும் மோடி யோசனை தெரிவித்தார். பொம்மை உற்பத்தித் துறையில் உள்ள பெரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவின் பாரம்பரியமான நாட்டுப்புற கூறுகளைக் கொண்ட டிஜிட்டல் விளையாட்டுகளை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments