விநாயகர் சதுர்த்தி - பலத்த பாதுகாப்பு

0 1053
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் உத்தரவை மீறி சிலைகளை வைக்கப் போவதாக சில இயக்கங்கள் தெரிவித்துள்ளதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையின் முக்கிய பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

சென்னையில் கூடுதல் காவல் ஆணையர்கள் கடந்த மூன்று நாட்களாக இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாக அந்த அமைப்பினர் உறுதி அளித்த போதும், ஒரு சிலர் தடையை மீறி ஊர்வலம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்

இதனால் பிரச்னைக்கு உரிய இடங்களைக் கண்டறித்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். வழக்கமாக சென்னையில் விநாயகர் சிலை கரைக்கும் 5 இடங்களில் கூடுதல் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர்.

அசம்பாவிதங்களைத் தடுக்க சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்தால் அவற்றை அகற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி செயல்படும் அமைப்பினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments