புதுச்சேரியில் படகு கட்டும் நிறுவனத்தில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

0 477
புதுச்சேரியில் படகு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

புதுச்சேரியில் படகு கட்டும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.

சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவருக்கு சொந்தமான அல்ட்ரா மரைன் என்ற படகு கட்டும் நிறுவனம், தேங்காய் திட்டு துறைமுகம் அருகே செயல்பட்டு வந்தது.

அங்கு அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றியது.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், பைபர் அட்டைகள், பஞ்சு, பேப்பர் அட்டைகள், மர பலகைகள் உள்ளிட்ட மூலப்பொருட்களில் தீப்பற்றி கட்டுப்படுத்த முடியாமல் கொளுந்துவிட்டு எரிந்தது.

புதுச்சேரி, கோரிமேடு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக போராடிய நிலையில், அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments