காபூலில் ராக்கெட் குண்டுகள் வீசித் தாக்குதல்

0 617

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு வாகனங்களில் வந்தவர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments