சிலியில் வீடற்றவர்களுக்கு உணவு வழங்கும் பேட்மேன்

0 692

சிலி நாட்டில் பேட் மேன் வேடம் அணிந்த ஒருவர் வீடற்றவர்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

கொரோனா காரணமாக சிலியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் சான்டியாகோவில் சானிடரி முக கவசம் மற்றும் பேட் மேன் உடை அணிந்த நபர் ஒருவர் தன்னுடைய வாகனத்தில் உணவு பொட்டலங்களை ஏற்றிக் கொண்டு நகர் முழுவதும் வலம் வந்து உணவின்றி தவிப்போருக்கு அதனை வழங்கி வருகிறார்.

கொரோனா காரணமாக சிலியின் பொருளாதாரம் மிக கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments