"5 ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு"

0 1467

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. 

மக்கள்தொகை மற்றும் மருத்துவமனை சார்ந்த புற்றுநோய் பதிவேடுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட, தரவுகளின் அடிப்படையில் ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நாட்டின் தற்போதைய புற்றுநோய் பாதிப்பிற்கு, சுமார் 27சதவிதம் புகையிலையே காரணமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து இரைப்பை குடல் மற்றும் மார்பக புற்றுநோய்கள் அதகளவில் காணப்படுவதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் நோய்த்தொற்று இல்லா நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments