எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமாக வேண்டி பாரதிராஜா உருக்கமான வீடியோ
கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமாக வாழ்த்து தெரிவித்து மூத்த திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கண்கள் கலங்க உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பள்ளி நண்பர்களிடம் கூட தாம் எஸ்பி பாலசுப்பிரமணியத்திடம் பழகியது போல நெருக்கமாக பழகியதில்லை என்று கூறியுள்ளார். எஸ்பி பாலசுப்பிரமணியத்தை நினைத்து துக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீடியோ முடிவில் பாரதிராஜா கண்கலங்கவும் செய்தார்.
பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் - மனோ
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைந்து வந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாடல்கள் பாடுவார் என தாம் 100 விழுக்காடு நம்புவதாக பாடகர் மனோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எஸ்.பி.பி தன்னைப் போல் பலருக்கு உத்வேகம் அளித்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments