நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா.. பொதுத்தேர்தல் தள்ளிவைப்பு..!

0 877

நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கி இருப்பதால் அங்கு விரைவில் நடைபெற உள்ள பொதுத் தேர்தல் மேலும் 4வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern நாட்டின் பொதுத் தேர்தல் அக்டோபர் மாதம் 17ந்தேதி நடைபெறும் என்றார். முன்னதாக அடுத்த மாதம் 19ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்த து.

இந்நிலையில் அங்கு மீண்டும் கொரோனா பரவத் தொடங்கி இருப்பதால் அனைத்து தரப்பினரும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments