கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து தமிழகத்துக்கு 17,406 கன அடி நீர் திறப்பு

0 3242
கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 406 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு 17 ஆயிரத்து 406 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியுள்ள நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது.

இதனால் இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒன்பதாயிரத்து எண்பது கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இரண்டாயிரத்து 406 கன அடியாகவும் இருந்தது.

கபினி அணைக்கு நீர்வரத்து 12 ஆயிரத்து 546 கன அடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 15 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments