எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர்

0 5112
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.

எம்.ஜி.எம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி.பிக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாகவும் கூறினார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் சபாநாயகம், எஸ்.பி.பி.யின் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதாகவும் 48 மணி நேரமாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments