சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் அகற்றம்.. ஓ.பன்னீர்செல்வத்துடன் 10 அமைச்சர்கள் சந்தித்த பின்னணி என்ன?

0 12179

சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரின் வீட்டில்   10 அமைச்சர்கள்  சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றி வைத்தார். அப்போது, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் அன்பும் ஆதரவும் தனக்கு கிடைத்திருப்பதாக குறிப்பிட்டார். சுதந்திர தின விழா முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர் கோட்டையிலேயே ஆலோசனையில் ஈடுபட்டடன. பிறகு, அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன்,காமராஜ், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் , சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி, கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை பசுமை வழி சாலையில் உள்ள அவரின்  வீட்டில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். 

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது வெளியே ஓ.பன்னீர்செல்வத்தில் ஆதரவாளர்கள் வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ் என கோஷம் எழுப்பினர். கூட்டத்தில் வரும் 2021- ஆம் ஆண்டு அ.தி.மு.க சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கெனவே, தேனி மாவட்டத்தில் பெரியகுளம் பகுதியில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஓ.பி.எஸ்தான் முதல்வராக வர வேண்டும் என பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பின்னர் அந்த நோட்டீஸ்கள் அகற்றப்பட்டதாக  சொல்லப்படுகிறது.image

அ.தி.மு.க. வில் தற்போது முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்.எல்,ஏ-க்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார் . என்றும் எடப்பாடியார்தான் முதல்வர் வரும் சட்டமன்ற தேர்தலை எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி அதிமுக எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். 

அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை கட்சி மேலிடம் முடிவெடுத்து அறிவிக்கும் என அமைச்சர் ஜெயக்குமாரும் . உரிய நேரத்தில் உரிய முறையில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கூறியிருந்தனர். இந்த நிலையில்தான் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அமைச்சர்களின் கருத்தை தொடர்ந்து அதிமுக மூத்த நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த கூட்டத்தில் முதுல்வர் வேட்பாளர் பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அமைச்சர்கள் பேசுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

ஆனால், இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்கவில்லை.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments