எஸ்.பி.பி - நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள் கூறும் திரையுலகம்

0 5847
கொரோனா பாதிப்புடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் திடீரென வியாழன் அதிகாலை முதல் அவருடைய உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு செயற்கை சுவாசம் மூலம் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், திரையுலகினரும் அவருடைய பல லட்சக்கணக்கான ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலகினரும் ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். எஸ்.பி.பி. நலமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என திரையுலகினர் சமூக வலை தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இசைஞானி இளையராஜாவும் எஸ்.பி.பியுடன் தமக்குள்ள நட்பைத் தெரியப்படுத்தி உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்

எஸ்.பி.பியின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என தாம் நம்புவதாகவும் அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பதிவில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் விசாரித்ததாகவும், அவர் விரைவாக குணமடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments