கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை மீரா மிதுன் மீது நடிகை ஷாலு ஷம்மு புகார்

0 2150
சமூக வலைதளங்களில் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட போவதாகவும், ஆசிட் வீசி கொலை செய்துவிட போவதாகவும் மிரட்டல் விடுப்பதாக நடிகை மீரா மிதுன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஷாலு ஷம்மு புகார் அளித்துள்ளார்.

சமூக இணையதளங்களில் நடிகர்களை விமர்சித்து மீரா மிதுன் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கும் ஷாலு ஷம்மு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.

ஜோ மைக்கேல் பிரவீன் என்பவரும் மீரா மிதுன் மீது புகார் அளித்தார். அதில் நடிகர்கள், பிரபலங்கள் குறித்து அவதூறு பேசி மீரா மிதுன் விளம்பரம் தேடி வருவதாகவும், அவருடைய சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும் என ஜோ மைக்கேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments