மலேசியாவில் 3 மாநிலங்களுக்கு கொரோனாவைப் பரப்பிய சிவகங்கைக்காரருக்கு ஐந்து மாத ஜெயில்!

0 57032
நேசர் முகமது சாபுர் பாட்சா (Nezar Mohamed Sabur Batca)

மிழகத்தின் சிவகங்கையிலிருந்து கடந்த மாதம் மலேசியா சென்ற நபர் மூலம் 45 பேருக்கும் அதிகமாகக் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. அரசு உத்தரவுப்படி 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பொதுமக்களுக்கு நோய் பரப்பிய குற்றத்துக்காக ஐந்து மாத சிறைத் தண்டனையும் 12,000 மலேசிய ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது மலேசிய நீதிமன்றம்.

image


57 வயதாகும் நேசர் முகமது சாபுர் பாட்சா (Nezar Mohamed Sabur Batca) என்பவர் மலேசியா, கெடா மாநிலத்தில் சொந்தமாக உணவகம் வைத்துள்ளார். கடந்த மாதம் இவர் தமிழகத்தின் சிவகங்கைப் பகுதியிலிருந்து மலேசியாவுக்குச் சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் பரிசோதனை நடத்திய போது அவருக்கு கொரோனா நோய் கண்டறியப்படவில்லை. பதினான்கு நாள்கள் தனிமையில் தங்கியிருக்க அதிகாரிகள் உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஓரிரு நாள்களில் தனது உணவகத்துக்குச் சென்று வேலை செய்யத் தொடங்கினார். அதைத்தொடர்ந்து மூன்று நாள்கள் கழித்து அவருக்கு சோதனை செய்தபோது கொரோனா நோய் கண்டறியப்பட்டது.

image

இடைப்பட்ட மூன்று நாள்களில், அவரது பொறுப்பற்ற செயலால் கொரோனா வைரசின் திரிபு எனக் கருதப்படும் ’ஜெனோம் 614’ எனும் அதிக வீரியமுள்ள வைரஸ் 45 - க்கும் மேற்பட்டோருக்கு பரவியது. மலேசியாவில் மற்ற இடங்களில் கொரோனா வைரஸ் பரவியதை விடவும் சிவகங்கையிலிருந்து சென்றவர் மூலம் அதிவேகத்தில், ’சிவகங்கை க்ளஸ்டர்’ என்றே மலேசிய சுகாதாரத்துறை அறிவித்தது. சிவகங்கை கிளஸ்டர் மூலம் மூன்று மாநிலங்களுக்குத் தொற்று அதிவேகத்தில் பரவியது. இதனால், பல இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்த நிலையில் நேசர் முகம்மது சாபுர் பாட்சா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அந்த விசாரணையில் அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையையும்  12,000 மலேசிய ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது மலேசிய நீதிமன்றம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments