சொத்துக்காக சகோதரிக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்து கொன்ற இளைஞர்... தீவிர சிகிச்சையில் பெற்றோர்!

0 13667

தன் விருப்பப்படி தாந்தோன்றித்தனமாக வாழ குடும்பத்தினர் இடைஞ்சலாக இருந்ததால், குடும்பத்துக்கே விஷம் வைத்து இளைஞர் ஒருவர் கொல்ல முயன்றுள்ளார். இதில், விஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டதில் அந்த இளைஞரின் சகோதரி இறந்து போனார்.

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள அரிங்கல் கிராமத்தை சேர்ந்த பென்னி - பெஸ்ஸி தம்பதி. இவரின் மூத்த மகன் ஆல்பின் (வயது 21) ஐ.டி.ஐ படித்து விட்டு ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கொரோனா லாக்டௌன் காரணமாக, தற்போது வேலை இழந்து வீட்டில் இருந்து வந்தார். ஆல்பினுக்கு 16 வயதில் ஆன் என்ற சகோதரியும் உண்டு.  வேறு வேலைக்கு செல்ல முயலாமல் எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டே இருப்பது ஆல்பினின் வழக்கம். இதை பெற்றோர் , சகோதரி  கண்டித்துள்ளனர். இதனால், பெற்றோர் மீது கோபத்திலிருந்த ஆல்பின் தன் சந்தோஷத்துக்கு தடையாக இருக்கும் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து, கடந்த ஜூலை 31- ந் தேதி கோழிக்கறியில் எலி மருந்தை கலந்து சமைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆனால், உணவில் குறைந்தளவு எலி மருந்து கலக்கப்பட்டதால், ஆல்பினின் தாய், தந்தை மற்றும் சகோதரிக்கு வயிற்று வலி மட்டுமே ஏற்பட்டுள்ளது. உயிருக்கு எந்த பாதிப்புமில்லாமல் தப்பித்து விட்டனர். தன் முயற்சி பலிக்காததால் மேலும் ஆத்திரமடைந்த ஆல்பின் இன்டர்நெட்டில் மனிதர்களை கொல்லுமளவுக்கு எலிமருந்தை உணவில் கலக்குவது எப்படி என்பதை தெரிந்து கொண்டுள்ளளார்.

பிறகு, வீட்டில் எலிமருந்து கலந்த ஐஸ்கிரீமை செய்து, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 5- ந் தேதி ஆல்பினின் சகோதரி ஆன் மற்றும் பெற்றோர் அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுள்ளனர். இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர்கள் மூவரும் செருபுழா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிசிச்சை பலனளிக்காமல் இளைஞரின் சகோதரி ஆன் பரிதாபமாக இறந்து போனார். சகோதரி இறந்த பிறகு, அவரின் உடல் அடக்கத்தையும் ஆல்பின் செய்துள்ளார். பிறகு, மருத்துவமைனைக்கு சென்று பெற்றோரையும் பார்த்து வந்துள்ளார். அவரின் பெற்றோருக்கு இன்னும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒரே வீட்டைச் சேர்ந்த மூவர் புஃட் பாய்ஸனால் பாதிக்கப்பட ஆல்பின் மட்டும் நன்றாக இருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவரிடத்தில் விசாரணை நடத்தினர். அதோடு, ஆல்பின் செல்போன் ஆன்லைன் ஹிஸ்ட்ரியை தேடிய போது, இணையத்தில் எலி மருந்து குறித்து  தேடியிருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, ஆல்பினை பிடித்து விசாரரித்ததில், பெற்றோர் மற்றும் சகோதரியை எலிமருந்து கலந்து கொடுத்து கொல்ல முயன்றது தெரிய வந்தது. தான் இஸ்டப்படி வாழ பெற்றோர் தடையாக இருந்ததாலும் சொத்துகள் முழுவதையும் தனக்கே வர வேண்டும் என்ற ஆசையிலும் இத்தகையை கொடூர செயலில் ஆல்பின் ஈடுபட்டது தெரிய வந்தது.

இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தையே விஷம் வைத்து கொல்ல முயன்றது கேரள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments