சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு குடியரசுத் தலைவர் உரை

0 1013
74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மாலை ஏழுமணிக்கு உரை நிகழ்த்துகிறார்.

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மாலை ஏழுமணிக்கு உரை நிகழ்த்துகிறார்.

ஆல் இந்தியா ரேடியோ மற்றும் அரசுத் தொலைக்காட்சியில் குடியரசுத் தலைவரின் உரை இடம் பெற உள்ளது. இந்தியிலும் ஆங்கிலத்திலுமாக இந்த உரை ஒலிபரப்பப்பட உள்ளது. தொடர்ந்து மாநில மொழிகளில் இரவு 9.30 மணிக்கு குடியரசுத் தலைவர் உரை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு அடைந்துள்ள வளர்ச்சி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் போன்ற பலருக்கு தமது வாழ்த்துகளை கூறி கௌரவப்படுத்துவதுடன் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் தமது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments