மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகளின் துயரில் கைகொடுக்கும் மென்பொறியாளர்

0 2345
மேற்கு தொடர்ச்சி மலை விவசாயிகளின் துயரில் கைகொடுக்கும் மென்பொறியாளர்

கொரோனா ஊரடங்கால், விளைந்த பழங்கள் விற்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த மேற்குதொடர்ச்சி மலை விவசாயிகளிடமிருந்து பழங்களை இறக்குமதி செய்து டோர் டெலிவரி மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கும் தனக்கும் வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் திருச்சியைச் சேர்ந்த மனோஜ் தர்மர்.

M.Tech பட்டதாரியான இவருக்கு கொரோனாவால் வேலை தடைபட, இந்த புதிய பணியைச் செய்து வருகிறார்.

ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலா தடையால் தாங்கள் விளைவித்த அவக்கோடா பழங்களை விற்கமுடியாமல் விவசாயிகள் வேதனை தெரிவித்ததைக் கண்டவர் தற்போது அவர்களிடமிருந்து வாரத்துக்கு 700கிலோவுக்கும் அதிகமான பழங்களை வரவழைத்து திருச்சி முழுவதும் டோர் டெலிவரி செய்துவருகிறார்.

நோய் எதிர்ப்பு சக்திமிக்க இந்தப் பழங்களுக்கு தற்போது தேவையுள்ளது என்றும் பழங்கள் விற்பனையால் விவசாயிகளுக்கும், தனக்கும் வருமானம் கிடைப்பதாக மகிழ்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments