எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்..!

0 3252
சென்னை ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

சென்னை ஆயிரம்விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம், திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட குக செல்வம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக  இல்லாத காரணத்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments