கொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்ய மத்திய அரசு தடை

0 1507

கொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைத்தவுடன் விநியோகம் மற்றும் மேலாண்மைக்கான டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவது குறித்த நிபுணர் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

மேலும் அதற்காக ஒரு ஆலோசனைக் குழுவை நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதுவரை கொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தனியே கொள்முதல் செய்யக் கூடாது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments