சத்தீஸ்கர் வனபகுதியில் பதுங்கியிருந்த 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1031

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுக்மா மாவட்டம் ஜாகர்குன்டாவில் (Jagargunda, Sukma district) உள்ள வனபகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அங்கு கோப்ரா படையினர், சிஆர்பிஎப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் 4 நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பஸ்தர் பிராந்திய காவல்துறை ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments