மகேஷ் பாபுவின் 'கிரீன் இந்தியா சேலஞ்' மரக்கன்று நடும் புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் விஜய்

0 3199

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, தான் மரக்கன்று நடும் புகைப்படத்தை நடிகர் விஜய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தனது பிறந்தநாளையொட்டி, GreenIndiaChallenge என்ற ஹேஷ்டேக்கில் மரக்கன்று நடும் வீடியோவை பதிவிட்டு, அந்த சவாலை ஏற்குமாறு நடிகர் விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், ஊரடங்கால் முடிங்கியிருக்கும் ரசிகர்களை குதூகலப்படுத்தும் விதமாக மகேஷ் பாபுவின் கிரீன் இந்தியா சேலஞ்சை நடிகர் விஜய் ஏற்றுள்ளார்.

வீட்டில் மரக்கன்று நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ள நடிகர் விஜய், ஒரு பசுமையான மற்றும் ஆரோக்கியமான இந்தியா இங்கே உருவாவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments