சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.984 குறைவு

0 4703

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 984 ரூபாய் சரிந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் விலை குறைந்துள்ளது. திங்கள்கிழமை கிராம் தங்கம் விலை 5 ஆயிரத்து 365 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 42 ஆயிரத்து 920 ரூபாயாகவும் இருந்தது.

இந்நிலையில் கிராம் தங்கம் விலை 123 ரூபாய் சரிந்து 5 ஆயிரத்து 242 ரூபாயாகவும், சவரன் தங்கம் விலை 984 ரூபாய் குறைந்து 41 ஆயிரத்து 936 ரூபாயாகவும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. 83 ஆயிரத்து 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோ வெள்ளி இன்று 600 ரூபாய் குறைந்து 82 ஆயிரத்து 800 ரூபாயாக விற்பனையாகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments