முடங்கிய நெசவு தொழில் தவிக்கும் நெசவாளர்கள்

0 4232
கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கைத்தறி நெசவு தொழில் முடங்கி, பல ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழந்து, தவித்து வருகிறார்கள். போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கைத்தறி நெசவு தொழில் முடங்கி, பல ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழந்து, தவித்து வருகிறார்கள். போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேக்கம் அடைந்துள்ளன.

கைத்தறி நெசவு - விசைத்தறி நெசவு - பதனிடுதல் - பின்னலாடை - ஆயத்த ஆடை என அனைத்து பிரிவுகளிலும் நாட்டி லேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.

முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள் தேங்கி இருப்பதாக வேதனை தெரிவித்த ஜவுளி நிறுவன உரிமையாளர்கள், இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக நெசவாளர்களின் கடின உழைப்பினால் உருவான சேலைகள் இன்று, உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளன. ஆனால், தற்போதைய சூழலில், உற்பத்தி செய்த சேலை மற்றும் ஆடை ரகங்கள் அனைத்தும் நெசவாளர் களிடம் தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் ஜவுளி ரகங்களை கொள்முதல் செய்து, வறுமையில் வாடும் நெசவாளர் களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை, 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நெசவாளர்களின் எண்ணிக்கை தற்போது 20 சதவீதமாக குறைந்துள்ளது. நெசவாளர்களுக்காக அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி 50 சதவிகிதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைப்பு சாரா நெசவாளர்கள் உட்பட அனைத்து நெசவுத் தொழிலாளர்களுக்கும் உடனடியாக இந்த நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments