நேபாளத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை, வெண்டிலேட்டர் பற்றாக்குறை எனத் தகவல்

நேபாளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் வெண்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
3 கோடி மக்கள் தொகை கொண்ட நேபாளத்தில் கொரோனா தொற்றால் சுமார் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் காத்மண்டுக்கு வர தொடங்கி உள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் அறிகுறியற்ற மற்றும் குறைவான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Rising popular anger over Nepali government's response to COVID-19 - WSWS : https://t.co/8D7CQnn16V
— News of Nepal (@NepNews) August 10, 2020
Comments