இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க போரிஸ் ஜான்சன் வலியுறுத்தல்

0 977
இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால், பள்ளிகளை இனியும் மூடுவது நல்லதல்ல என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பள்ளி படிப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் பள்ளிக் கல்வியை தவறவிட்டால் நாடு பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு கொரோனா பரவல் முற்றிலும் குறையாமல் இருந்தாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து பள்ளிகளை திறக்க பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments