இந்திய பொருட்களை வாங்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துக-வர்த்தகர்களுக்கு அமைச்சர் கோரிக்கை

0 1761
இந்தியாவில் தயாரான பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வர்த்தகர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் தயாரான பொருட்களையே வாங்க வேண்டும் என மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு வர்த்தகர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார்.

தேசிய வர்த்தகர் தினத்தை முன்னிட்டு நடத்திய டிஜிட்டல் உரையில் இந்த கோரிக்கையை விடுத்த அவர், பிரதமர் மோடியின் சுயசார்பு திட்டத்தை நிறைவேற்ற முன்வருமாறும் வர்த்தகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். எதிரி நாடுகளில் இருந்து தரமற்ற பொருட்களை வாங்கி மக்களை ஏமாற்றும் வர்த்தகர்களை அடையாளங்காட்டுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

சுயசார்புத் திட்டத்தின் கீழ் தரமான உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தெரிவித்த அவர்,  நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பதுடன். சர்வதேச தரம் வாய்ந்தபொருட்களை குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments