100 அடியை எட்டும் பவானி அணை..!

0 2524
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்குத் தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்குத் தொடர்ந்து நீர் வந்துகொண்டிருப்பதால் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 4ஆம் தேதி முதல் நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் பவானி ஆறு, மாயாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்தாலும் மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து ஏழாயிரத்து 389 கன அடியாகவும், நீர் இருப்பு 28 புள்ளி 6 டிஎம்சி ஆகவும் இருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காகப் பவானி ஆற்றில் 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்ட உள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments