தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

0 4654
கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிகக் கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரம், ஒடிசா மாநிலங்களை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனாலும் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மிகக் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வடபகுதி, டெல்டா பகுதி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments