இலங்கை பிரதமராக 4ஆவது முறையாக பதவியேற்றார் மகிந்த ராஜபக்சே

0 2160

இலங்கை பிரதமராக 4ஆவது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள 225 இடங்களுக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், மகிந்த ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜனா பெரமுனா (Sri Lanka  Podujana Peramuna) கட்சி 145இல் வெற்றி பெற்றது. இதையடுத்து கொழும்பு அருகே கெலனியாவில் உள்ள புத்த கோயிலில் வைத்து பிரதமராக இன்று காலை 9.30 மணிக்கு அவர் பதவியேற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சேவும் (Gotabaya Rajapaksa) கலந்து கொண்டார். இலங்கை அதிபராக 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டுவரை மகிந்த ராஜபக்சே பதவி வகித்துள்ளார்.

அக்காலத்தில்தான்  விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் ராணுவம் வெற்றி பெற்றது. இதையடுத்து 2004 முதல் 2005 வரையிலும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளிலும் பிரதமராக ராஜபக்சே பதவி வகித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments