2020-ஆம் ஆண்டில் தங்கம் விலை 40 சதவீதத்திற்கு மேல் உயர்வு

0 1105

இந்தியாவில் நடப்பு ஆண்டில் தங்கம் விலை 40 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையோ 60 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

மூன்றே வாரங்களில் வெள்ளி விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மந்த நிலையில் இருக்கும் தொழில்துறை உற்பத்தி மீட்சியடைந்து, தேவை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும் முதலீடு அதிகரித்ததாலும் வெள்ளி விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்து இருப்பதும் தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பொருள் சந்தையில் 24 காரட் சுத்த தங்கம்10 கிராம் 56 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 78 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தையும் தொட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்தியா 6 ஆயிரம் டன் வெள்ளியை இறக்குமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments