தமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, உயர் பொருளாதார வளர்ச்சி

0 2924
தமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, தேசிய சராசரியைவிட உயர் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தமிழகம், தொடர்ந்து 3ஆவது ஆண்டாக, தேசிய சராசரியைவிட உயர் பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியின் தேசிய சராசரி 4.2 சதவீதம் ஆக இருந்தது. அதைவிட இருமடங்காக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8.03 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல, 2018-19ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1,49,941 ரூபாய் ஆக 12ஆம் இடத்தில் இருந்தது. கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் தனிநபர் வருமானம் 1,53,853 ரூபாய் ஆக 6வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு அடிப்படையில், அதாவது பொருளாதார வளர்ச்சியில் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. விவசாயம், உற்பத்தி, சேவை ஆகிய மூன்று துறைகளின் சீரான வளர்ச்சி இதற்கு உதவியுள்ளது. அதிலும் உற்பத்தித் துறை கடந்த நிதியாண்டில் 10.02 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments