ஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பையில் இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையில் இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி உடல்நலக்குறைவால் அவதிப்படுவதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜக்தாலே அதனைத் தள்ளுபடி செய்தார். முன்னதாக இளம் பெண் ஷீனா போரா முறைதவறி காதல் செய்ததால் அவரது தாயான இந்திராணி முகர்ஜியும், தந்தை முறையான பீட்டர் முகர்ஜியும் கடந்த 2012 ஆம் ஆண்டு கொலை செய்தனர். 2015-ல் கைதுசெய்யப்பட்ட இருவரும் தற்போது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
Comments