மூளைச்சலவை முதல் நிதியுதவி வரை... இந்தியாவுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபடும் துருக்கி!

0 22388
துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் மோடி

சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு நேரடி எதிரிகள். அதனால், சமாளித்து விடலாம். ஆனால், மறைமுகமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு ஊக்குவித்து வருகிறது. அந்த நாட்டிடம் எச்சரிக்கையாக இல்லையென்றால், இழப்பு அதிகமாகும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

கடந்த 2019- ம் ஆண்டு ஆகஸ்ட் 5- ந் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தானும் துருக்கியும் இந்தியாவுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் நாடளுமன்றத்தில் பேசிய, துருக்கி அதிபர் எர்டோகன், காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படும் என்று நேரடியாகவே பேசினார். இந்த ஆண்டு ஆகஸ்ட் 5- ம் தேதியும் காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி வெளியுறவுத்து கருத்து தெரிவித்துள்ளது.

துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியா எடுத்த நடவடிக்கையால் காஷ்மீரில் அமைதி நிலவவில்லை. காஷ்மீன் மாநிலத்தின் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. எனவே,காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கக்கப்பட்ட ஓராண்டு நிறைவு தினத்தில் பாகிஸ்தான், சீனா, துருக்கி ஆகிய மூன்று நாடுகள்தான் காஷ்மீர் குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தன. பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவுடன் நேரடியாக மோதிக் கொள்ளும் நாடுகள். ஆனால், துருக்கிக்கும் இந்தியாவுக்கும் நேரடி மோதல் இல்லை. ஆனாலும் இந்தியாவுக்கு எதிராக மறைமுகமாக பல உள்ளடி வேலைகளில் துருக்கி ஈடுபட்டு வருவதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு எதிராக நிறைய நடவடிக்கைகள் துருக்கியில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் மிதவாதிகளாக உள்ள இஸ்லாமிய மக்களையும் அதி தீவிர மதப்பற்றாளர்களாக, அடிப்படைவாதிகளாக மாற்ற துருக்கி மறைமுகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.image

துருக்கியில் படிக்க செல்லும் இந்திய இஸ்லாமிய மாணவர்களை மூளைச்சலவை செய்து இந்தியாவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கிறது. துருக்கியில் படிக்க விரும்பும் இஸ்லாமிய மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் என்ற பெயரில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. துருக்கியில் இந்திய மாணவர்கள் சென்று இறங்கியதும் பாகிஸ்தானின் ஐ.எஸ் உளவாளிகள் இந்த மாணவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுகிறார்கள். இந்தியாவிலிருந்து துருக்கிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு துருக்கி இளைஞர் அறக்கட்டளை, துருக்கி ஏர்லைன்ஸ், யூனிஸ் எம்ரி நிறுவனம், துருக்கி தியானெட் அறக்கட்டளை, துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைத்தல் அறக்கட்டளை ஆகியவை நிதியுதவி அளிக்கின்றன.

இந்த அமைப்புகள் துருக்கி அரசு அல்லது துருக்கி அதிபர் எர்டோகன் குடும்பத்துடன் நேரடி தொடர்பு கொண்டவை. துருக்கி இளைஞர் அறக்கட்டளை அமைப்பு எர்டோகனின் மகன் பிலால் தலைமையில் இயங்குகிறது. டெல்லியிலுள்ள துருக்கி தூதரகமும் இந்தியாவுக்கு எதிராகச் செயல்படுகிறது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் கலாச்சார பரிமாற்றம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து ஏராளமான இளைஞர்களைத் தேர்வு செய்து துருக்கி தூதரகம் அனுப்புகிறது. அப்படி செல்பவர்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்படவும் பேசவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர் ''என்று சொல்லப்பட்டுள்ளது.image

இந்தியாவுக்கு எதிராகத் துருக்கி செயல்பட பல காரணங்கள் உள்ளன. துருக்கி அதிபர் எர்டோகன் ஒட்டமான் பேரரசு போன்ற இஸ்லாமிய பேரரசை உருவாக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளார். இந்த ஓட்டமான் இஸ்லாமிய பேரரசுதான் துருக்கியை தலைமையிடமாக கொண்டு வடகிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, வட ஆப்ரிக்க நாடுகளை ஆட்சி செய்தது. கி.பி. 1500 - 1800 ஆம் ஆண்டுகளில் மிக வலுவான பேரரசாக இருந்தது. ஒட்டமான் போன்ற பழமைவாதம் நிறைந்த பேரரசாக துருக்கியை மாற்ற வேண்டும். இஸ்லாமிய மக்களிடத்தில் சவுதி அரேபியாவுக்கு உள்ள செல்வாக்கை உடைக்க வேண்டும். தெற்காசிய நாடுகளில் வசிக்கும் இஸ்லாமிய மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதெல்லாம் எர்டோகனின் கனவு.

அதனால்தான், உலக இஸ்லாமிய மக்களை காக்க துருக்கியால்தான் முடியும் என்பது போன்ற ஒரு மாயையை எர்டோகன் உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments