' குட்டி சேது பிறந்துள்ளார் ! '- மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் நண்பர்கள் மகிழ்ச்சி

0 5514

கடந்த மார்ச் மாதத்தில் திடீரென மரணமடைந்த நடிகரும் மருத்துவருமான சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

'கண்ணா லட்டு திங்க ஆசையா 'என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சேதுராமன். சேதுராமனுக்கு உமா என்கிற உமையாள் என்பவருக்கும் கடந்த 2016- ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளது. உமையாள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருந்த நிலையில்,கடந்த மார்ச் 26- ந் தேதி சேதுராமன் திடீரென இறந்து போனார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக சொல்லப்பட்டது. 37 வயதான அதுவும் டாக்டரான சேதுராமன் திடீரென இறந்தது தமிழ் திரையுலகை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு, அவரின் ரசிகர்களும் கடும் வேதனையடைந்தனர். சேதுராமனின் மனைவியும் கையறு நிலையில் இருந்தார்.

கணவரை இழந்து தவித்த உமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதையடுத்து, நடிகர் சேதுராமன் குட்டி சேதுவாக பிறந்துள்ளதாகவும் நெட்டிஸன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர் டாக்டர். சேதுராமன் . கடந்த 2013- ம் ஆண்டு சந்தானம் தயாரித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா 'என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து , வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா 50/50 ஆகிய படங்களில் நடிகர் சேதுராமன் நடித்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments