ஹவாய் தீவில் வெடித்துச் சிதறிய கிளேயா எரிமலை

0 654

ஹவாய் தீவுகளில் வெடித்துள்ள கிளேயா எரிமலையின் மக்மா குழம்புகள் அருகில் உள்ள வெப்ப ஆற்றல் ஆலைக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளதால் ஹவாய் தீவுகளில் மின்சார வசதி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்மா எனப்படும் நெருப்புக் குழம்புகளை வெளியிட்டு வரும் கிளேயா எரிமலை கடல் நீரில் கலக்கும் போது கந்தக டை ஆக்ஸைடு வாயுவையும், குழம்போடு அடர் குளோரிக் அமிலமும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் ஹவாய் தீவுகளுக்கு தேவையான மின்சாரத்தில் 25 சதவீதத்தை வழங்கும் ஜியோ தெர்மல் பவர் பிளாண்ட் எனப்படும் புவி வெப்ப ஆற்றல் ஆலைக்கு மிக அருகில் நெருப்புக் குழம்புகள் பொங்கி வருகின்றன. இதனால் ஹவாய் தீவின் மின்சார வசதி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments