பாகிஸ்தான் குர்பாணி.. காளையன்ஸ் பாய்ச்சல்..! அடிக்கும் உதைக்கும் பஞ்சமில்லை

0 2042

பாகிஸ்தானில் குர்பானி கொடுப்பதற்காக வீடுகளுக்கு கொண்டு வரப்பட்ட முரட்டுக் காளைகள், பலியிட முயன்றவர்களை தாக்கி தப்பிச்சென்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானில் குர்பானி கொடுப்பதற்காக விலைக்கு வாங்கிச்செல்லப்பட்ட காளைகள் அதனை பலி கொடுக்க அதன் கால்களைக் கட்ட முயன்றவர்களை புரட்டி எடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

ஒரு காளை மாட்டின் காலில் நைசாக கயிற்றைக் கட்ட முயன்றவரை அந்த மாடு சைசாக முகத்தில் அதே காலால் விட்ட உதை அவரை அதிர்ந்து கீழே விழச்செய்தது.

கருப்பு நிற காளை ஒன்றை 10 பேர் சாய்த்து கழுத்தை திருகி பலி கொடுக்க கடுமையாக முயன்றனர். அவர்கள் அத்தனை பேரையும் தூக்கி பந்தாடிவிட்டு சிட்டாக பறந்து சென்றான் அந்த கறுப்பன்..!

காளை மாடு ஒன்றை மூங்கில் ஏணியை வைத்து மடக்க முயன்றவர்களை சிதறவிட்டு ஏணியுடன் தப்பிச்சென்றது அந்த மாடு.

மற்றொரு மாடு மூன்று பேரை 3 கால்களால் டீல் செய்து விட்டு பாய்ந்து சென்றது.

கொம்பு இல்லா மாடுதானே வம்பு இழுக்காது என்று கெத்தாக நின்றவரை ஒரே முட்டில் மரணிக்க வைத்த நிகழ்வும் ராவல் பிண்டியில் அரங்கேறியுள்ளது

சில மாடுகள் வண்டியில் இருந்து குதித்ததும் மாடு வியாபாரிகளுக்கும், அதனை வாங்கியவர்களுக்கும் டாடா காட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டன.

எல்லாவற்றிற்கும் உச்சக்கட்டமாக காளைமாடு ஒன்று தப்பி ஓடிய வேகத்தில் கார் ஒன்றின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, தலை உள்ளே நுழைந்ததில் கழுத்து உடைந்து அந்த மாடு பலியானது.

அதேபோல ஒட்டகம் ஒன்றை கழுத்தில் குத்தி ரத்தபலியிட முயன்றவரை அந்த ஒட்டகம் தனது காலால் ஓங்கி அடித்து தன்னை சிங்கமாக காட்டிக் கொண்டது.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான காளைகள் மற்றும் ஒட்டகங்கள் பலியிடப்பட்ட நிலையில், அவர்களுக்கு தண்ணிகாட்டிய ஒருசில சம்பவங்கள்தான் இவை...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments