வெடி பொருள் வைத்திருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு - இஸ்ரேல்

சிரியா எல்லையோரம் வெடிப்பொருட்கள் வைத்திருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு சிரிய தலைநகர் டமாஸ்கஸ் அருகே ஈரான் ஆதரவு லெபனான் குழு மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதையடுத்து இருநாட்டு எல்லைகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
மேலும் லெபனான் மற்றும் சிரியா எல்லையையொட்டிய தங்கள் பகுதிகளில் ராணுவ பலத்தை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சிரிய எல்லையோர ரோந்து பணியின் போது 4 தீவிரவாதிகளை சுட்டதாக இஸ்ரேல் ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
Comments