மாநிலங்களவை எம்பி அமர்சிங் காலமானார்

0 2053
மாநிலங்களவை எம்.பி.யும், சமாஜவாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான அமர்சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 64. 2013ம் ஆண்டு சிறுநீரக கோளாறால் அவர் பாதிக்கப்பட்டார்.

மாநிலங்களவை எம்.பி.யும், சமாஜவாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவருமான அமர்சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 64. 2013ம் ஆண்டு சிறுநீரக கோளாறால் அவர் பாதிக்கப்பட்டார்.

இதற்கு சிகிச்சை எடுத்த நிலையில், அண்மையில் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அமர்சிங் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சையில் உடல்நிலை தேறாத நிலையில் மேலும் மோசமடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அமர்சிங் இன்று மதியம் உயிரிழந்து விட்டதாக மும்பை மிர்ரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments