புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை..!

0 17752

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 224 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 41,424 ரூபாயாக உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து, பல புதிய உச்சங்களை எட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாயை கடந்த ஒரு சவரன் ஆபரணத்தங்கம், நேற்று வரலாற்றில் முதல்முறையாக 41 ஆயிரம் ரூபாயை கடந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்துள்ளது.

நேற்று 5,150 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று, 28 ரூபாய் உயர்ந்து 5,178 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 41,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று, 224 ரூபாய் உயர்ந்து 41,424 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் பார் வெள்ளி ஒரு கிலோ 1,400 ரூபாய் உயர்ந்து 72,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments