கொரோனாவால் பாதித்த முதியவர் உயிரிழப்பு-ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல்
பெங்களூருவில் கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆக்சிஜனை சரிவர செலுத்தவில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் கொரோனா பாதித்த முதியவர் மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், அவருக்கு ஆக்சிஜனை சரிவர செலுத்தவில்லை எனக் கூறி தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டுள்ளார்.
70 வயதான அந்த முதியவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் நுழையும்போதே முதியவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆம்புலன்ஸை ஓட்டிவந்த ஓட்டுநர் யோகேஷ் என்பவர் முதியவருக்கு ஆக்சிஜனை சரிவர செலுத்தாததே அவர் உயிரிழக்கக் காரணம் எனக் கூறி உறவினர்கள் அவரை சரமாரியாகத் தாக்கினர்.
கொரோனாவால் பாதித்த முதியவர் உயிரிழப்பு-ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் #Bengaluru | #Covid19 https://t.co/nVjhnmewuN
— Polimer News (@polimernews) July 31, 2020
Comments