டெல்லி லோடி எஸ்டேட் அரசு பங்களாவை காலி செய்தார் பிரியங்கா காந்தி

0 1473
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி லோடி எஸ்டேட்டில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி லோடி எஸ்டேட்டில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்துள்ளார்.

பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டு, Z பிளஸ் பாதுகாப்பாக அது தரம் குறைக்கப்பட்டது. இதை அடுத்து அரசு பங்களாவை காலி செய்யுமாறு மத்திய நகர்ப்புற அமைச்சகம் கடந்த 1 ஆம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதன் அடிப்படையில் அரசு பங்களாவை காலி செய்துள்ள அவர், குருகிராமில் உள்ள தமது பண்ணைவீட்டில் சில நாட்கள் தங்குவார் என கூறப்படுகிறது. அதன் பின்னர் மத்திய டெல்லியில் தயாராகி வரும் வீட்டுக்கு அவர் குடிபெயர்வார் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments