விவசாயி அணைக்கரை முத்து உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 2488
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயி அணைக்கரை முத்துவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் வனத்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவசாயி அணைக்கரை முத்துவின்  உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சீலிட்ட கவரில் அணைக்கரை முத்துவின் உடற்கூராய்வு அறிக்கை வழங்கப்பட்டது. அதில், அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த விவசாயின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிபதி பொங்கியப்பன் இன்று உத்தரவிட்டார். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தடய அறிவியல் துறை தலைவர், பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு  மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments