மான்செஸ்டர் கிரிக்கெட் டெஸ்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி

0 1214

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 269 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மான்செஸ்டர் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில், இங்கிலாந்து அணி 369 ரன்கள் குவிக்க, மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 197 ரன்களுக்கு சுருண்டது.

172 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 226 ரன்கள் எடுத்திருந்தபோது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, 399 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சர்வதேச அளவிலான கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தொடங்கிய முதல் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றிய நிலையில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதினை கைப்பாற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments