தமிழகத்தில் இன்று மேலும் 6972 பேருக்கு கொரோனா உறுதி

0 5776
தமிழகத்தில் மேலும் 6972 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 6972 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவர்களில் 64 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்கள். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 88 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

நோய் தொற்றில் இருந்து மேலும் 4707 பேர் குணமடைந்தனர். தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட 57 ஆயீரத்து 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் புதிதாக 1107 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகரில் ஒரே நாளில் 577 பேருக்கும், திருவள்ளூரில் 486 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது. செங்கல்பட்டில் 365 பேரும், மதுரையில் 346 பேரும், திருநெல்வேலியில் 385 பேரும், தூத்துக்குடியில் 380 பேரும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments