நடிகை வனிதா மீது, சென்னை போரூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

0 6814
நடிகை வனிதா மீது, சென்னை போரூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு

தடையை மீறி தொற்று நோய் பரவும் வகையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதாக, நடிகை வனிதா மீது போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்து கொண்டது சமூக வலை தளங்களில் பெரும் விவாதமானது. இந்த நிலையில் வனிதா வசித்து வரும் போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், 144 தடையை மீறி 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

அரசிடம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், குடியிருப்போர் நலச் சங்கத்திடமும் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியை நடத்தியதாக அவர் வசித்து வரும் பிரிஸ்டேஜ் பெல்லா என்ற அடுக்குமாடி குடியிருப்போர் சங்கத்தின் நிர்வாகி நிஷா தோட்டா என்பவர் போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் அடிப்படையில் தொற்று நோயை பரப்பும் வகையில் செயல்படுவது, தடை உத்தரவை மீறுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் நடிகை வனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments